மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தில்லி சந்தையில் பயங்கர தீ விபத்து!

மேற்கு தில்லியின் விகாஸ்புரி பகுதியில் உள்ள டிடிஏ லால் சந்தையில் இன்று காலை ஒரு கடையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. 

News image
Updated On :24 டிசம்பர் 2022, 9:07 am


மேற்கு தில்லியின் விகாஸ்புரி பகுதியில் உள்ள டிடிஏ லால் சந்தையில் இன்று காலை ஒரு கடையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. 

விகாஸ்புரி பகுதியில் அதிகாலை 5.50 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு 18 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

கட்டடத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தானது, காலை 10 மணியளவில் அணைக்கப்பட்டதாகத் தீயணைப்பு அதிகாரி தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.