நாட்டின் பன்மைத்துவத்தைப் பாதுகாக்க, ராகுல் முன்னெடுக்கும் ஒற்றுமை நடைப்பயணத்தில் தானும் பங்கேற்கப்போகிறேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஹரியாணாவில் இருந்து இன்று காலை தலைநகர் தில்லிக்குள் நுழைந்திருக்கிறது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நடைப் பயணம்.
ராகுல் காந்தியின் நடைப்பயணம் தில்லியில் இன்று பிற்பகலில் தொடங்கும்போது நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல் ஹாசன், விடுதலைப் போராட்ட வீரா்களின் குடும்ப உறுப்பினா்கள், காங்கிரஸ் முக்கியத் தலைவா்கள் உள்பட 40,000 முதல் 50,000 போ் வரை பங்கேற்க உள்ளனர்.
மதிய இடைவேளைக்குப் பிறகு தில்லி ஆசிரமத்தில் இருந்து புறப்படும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில், ராகுல் காந்தியுடன் கமலும் இணையவிருக்கிறார். அதற்கு முன்பு, தனது டிவிட்டர் பக்கத்தில் கமல் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதாவது, இந்தியாவின் பன்மைத்துவத்தைப் பாதுகாக்க அன்புச் சகோதரர் ராகுல் காந்தி முன்னெடுக்கும் பாரத் ஜோடோ ஒற்றுமை யாத்திரையில் நானும், மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகளும் கலந்துகொள்கிறோம். மண் மொழி மக்கள் காக்க ஓர் இந்தியக் குடிமகனாக என் பங்களிப்பு எப்போதும் இருக்கும்.ஜெய் ஹிந்த்! என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த செப்டம்பா் 7-ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த நடைப்பயணம் கேரளம், ஆந்திரம், கா்நாடகம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா மாநிலங்களைக் கடந்து தற்போது தலைநகர் தில்லியை எட்டியுள்ளது.
இதையும் படிக்க.. 2 ஆண்டுகளாக இருக்கும் பிஎஃப்.7 திரிபை திடீரென பூதாகரமாக்குவது ஏன்?
நேற்று இரவு ஹரியாணாவில் இரவு ஓய்வுக்குப் பிறகு, சனிக்கிழமை காலை மீண்டும் தொடங்கிய நடைப்பயணம், பதா்பூா் எல்லை வழியாக தில்லிக்குள் நுழைந்தது. நடைப்பயணத்தை ஆயிரக்கணக்கான மக்கள் வரவேற்றனர்.
இன்று காலை, நடைப்பயணத்தின் போது ராகுலுடன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா, பொதுச் செயலாளர் பிரியங்கா உள்ளிட்டோரும் சிறிது நேரம் நடந்து சென்று மக்களின் வரவேற்பைப் பெற்றுக் கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK

"Exit Poll is NOT Exact Poll" தமிழிசை சௌந்தரராஜன் | BJP
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


