எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ராகுல் காந்தி நடைப்பயணம் குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை: மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே

ராகுல் காந்தி நடைப்பயணம் குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

News image
Updated On :24 டிசம்பர் 2022, 4:41 pm

DIN

ராகுல் காந்தி நடைப்பயணம் குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, இந்தியாவின் பிரதமராகும் வாய்ப்பு ராகுல் காந்திக்கு ஒருபோதும் கிடைக்காது. 2024 தேர்தலில் நாங்கள் (என்டிஏ) 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால், ராகுல் காந்தி எப்படி பிரதமராக முடியும்?. 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களுக்கு மேல் பெறாது. 

ராகுல் காந்தி நடைப்பயணம் குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை. நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்? நாங்கள் சிறிதும் பயப்படவில்லை. நரேந்திர மோடி நமது வலிமையான பிரதமர். அவரது தலைமையில் நாடு வேகமாக முன்னேறி வருகிறது, வளர்ச்சியின் திசையில் செல்கிறது, நாங்கள் பயப்பட ஒன்றுமில்லை.

காங்கிரஸ் கட்சிதான் பயத்தில் உள்ளது. முன்னதாக சனிக்கிழமையன்று காங்கிரஸ் தலைவர் பவன் கேரா கூறுகையில், 2024ல் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்கள் விரும்புகிறார்கள். 2024 தான் அதை முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.