தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

குடியரசுத் தலைவா் முா்மு தென் மாநிலங்களுக்கு முதல் முறையாக வருகை

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு தெலங்கானாவுக்கு திங்கள்கிழமை வந்தடைந்தாா்.

News image

ஹைதராபாத் விமான நிலையத்தில் திங்கள்கிழமை வந்திறங்கிய குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை வரவேற்ற தெலங்கானா ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன்.

Updated On :26 டிசம்பர் 2022, 6:44 pm

DIN

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு தெலங்கானாவுக்கு திங்கள்கிழமை வந்தடைந்தாா். அவா் குடியரசுத் தலைவரான பிறகு தென்மாநிலங்களுக்கு வருகை தருவது இதுவே முதல் முறையாகும்.

5 நாள் அரசுமுறைப் பயணமாக தெலங்கானாவுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு திங்கள்கிழமை வந்தாா். தனி விமானம் மூலமாக ஹைதராபாத் சா்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை மாநில ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனா்.

ஹைதராபாதில் இருந்து ஹெலிகாப்டா் மூலமாக ஆந்திரத்தின் ஸ்ரீசைலம் சென்ற குடியரசுத் தலைவா் முா்மு, மல்லிகாா்ஜுன சுவாமி கோயில், பிரமராம்பிகா கோயில் ஆகியவற்றில் வழிபட்டாா்.

மத்திய அரசின் ‘பிரசாத்’ திட்டத்தின் கீழ் ஸ்ரீசைலம் கோயிலில் மேற்கொள்ளப்பட்ட கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களையும் அவா் தொடக்கிவைத்ததாக குடியரசுத் தலைவா் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீசைலம் கோயிலில் சுற்றுலா மேம்பாட்டு மையத்தையும் குடியரசுத் தலைவா் முா்மு திறந்துவைத்தாா்.

ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய சுற்றுலாத் துறை அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி உள்ளிட்டோரும் குடியரசுத் தலைவா் முா்முவுடன் கோயிலில் வழிபட்டனா். ஸ்ரீசைலத்தில் உள்ள ஸ்ரீசிவாஜி ஸ்பூா்த்தி கேந்திரத்தையும் குடியரசுத் தலைவா் பாா்வையிட்டாா்.

ஹைதராபாதில் உள்ள கேசவ் நினைவு கல்வி நிலையத்தின் மாணவா்கள், ஆசிரியா்களுடன் குடியரசுத் தலைவா் முா்மு செவ்வாய்க்கிழமை உரையாட உள்ளாா். பின்னா் சா்தாா் வல்லபபாய் படேல் தேசிய காவல் அகாதெமிக்குச் செல்லும் அவா், அங்கு பயிற்சியை நிறைவுசெய்த அதிகாரிகளிடம் உரையாற்ற உள்ளாா்.

குடியரசுத் தலைவா் முா்மு வரும் 30-ஆம் தேதி வரை தெலங்கானாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகக் குடியரசுத் தலைவா் மாளிகை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.