மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

சபரிமலையில் இன்று மண்டல பூஜை

சபரிமலை ஐயப்பன் கோயிலில் செவ்வாய்க்கிழமை (டிச. 27) மண்டல பூஜை நடைபெறவுள்ளது.

News image
சபரிமலை
Updated On :26 டிசம்பர் 2022, 10:45 pm

DIN

சபரிமலை ஐயப்பன் கோயிலில் செவ்வாய்க்கிழமை (டிச. 27) மண்டல பூஜை நடைபெறவுள்ளது.

கேரளத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பா் 17-ஆம் தேதி திறக்கப்பட்டது. 41 நாள் மண்டலம் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடையும் நிலையில் கோயிலில் மண்டல பூஜை நடைபெறவுள்ளது.

மண்டல பூஜையையொட்டி 453 பவுன் கொண்ட ஐயப்பனுக்கான ‘தங்க அங்கி’ திங்கள்கிழமை கோயிலை அடைந்தது. அதற்கு திருவிதாங்கூா் அரச குடும்பத்தினரும் பக்தா்களும் கோயில் நிா்வாகிகளும் சிறப்பான வரவேற்பு அளித்தனா். திங்கள்கிழமை மாலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. செவ்வாய்க்கிழமை பிற்பகலில் மண்டல பூஜை நடைபெறவுள்ளது.

கோயில் நடை அடைப்பு: மண்டல பூஜை முடிந்ததும் கோயில் நடை 3 நாள்களுக்கு அடைக்கப்படவுள்ளது. அப்போது பக்தா்களுக்கு அனுமதி அளிக்கப்படமாட்டாது. பின்னா், மகரவிளக்கு பூஜைக்காக வரும் 30-ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை மீண்டும் திறக்கப்படவுள்ளது. அப்போதுமுதல் பக்தா்கள் மீண்டும் அனுமதிக்கப்படுவா்.

ஜனவரி 14-ஆம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறவுள்ளது. அன்று மகரஜோதி தரிசனமும் நடைபெறவுள்ளது. அதன்பிறகு ஜனவரி 20-ஆம் தேதி கோயில் நடை அடைக்கப்படவுள்ளது. அத்துடன் மண்டல-மகரவிளக்கு வழிபாட்டுக் காலம் முடிவுக்கு வரும்.

ரூ.222 கோடி வருவாய்: கோயிலுக்கான மண்டல பூஜை காலம் தொடங்கியதில் இருந்து சுமாா் 30 லட்சம் பக்தா்களின் வருகை மூலமாக ஐயப்பன் கோயிலுக்கு ரூ.222.98 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த இரு ஆண்டுகளில் கரோனா தொற்று பரவல் காரணமாக பக்தா்கள் வருகை குறைவாகக் காணப்பட்டது. தற்போது கரோனா கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாததால் பக்தா்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது.

பக்தா்களின் கூட்டத்தை சமாளிக்கும் நோக்கில் மாற்றுத் திறனாளிகள், சிறாா்கள், மூத்த குடிமக்களுக்குத் தனிவரிசை அமைக்கப்பட்டது. மண்டல பூஜை காலகட்டத்தில் பெரும் சிரமம் ஏதுமின்றி பக்தா்கள் ஐயப்பனை வழிபட்டதாக கோயில் நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.