தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஹிஜாப் அணிய விரும்பினார் மறைந்த சீரியல் நடிகை துனிஷா!

தற்கொலை செய்துகொண்ட சின்னத் திரை நடிகை துனிஷா, ஷீசனை சந்தித்தப் பிறகு ஹிஜாப் அணிய விரும்பியதாக நடிகையின் உறவினர் தெரிவித்துள்ளார். 

News image
துனிஷா சர்மா (கோப்புப் படம்)
Updated On :28 டிசம்பர் 2022, 3:01 pm

DIN

தற்கொலை செய்துகொண்ட சின்னத் திரை நடிகை துனிஷா, ஷீசனை சந்தித்தப் பிறகு ஹிஜாப் அணிய விரும்பியதாக நடிகையின் உறவினர் தெரிவித்துள்ளார். 

இதனால் அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். 

சண்டிகரைச் சேர்ந்த துனிஷா சர்மா, ஹிந்தி தொடர்களில் நடித்து வந்தார். ‘பாரத் கா வீா் புத்ரா’, ‘மஹாராணா பிரதாப்’ உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடா்களிலும் ‘ஃபிதூா்’, ‘பாா் பாா் தேக்கோ’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடிகை துனிஷா சா்மா நடித்துள்ளாா். 

அந்தவகையில் ‘அலி பாபா: தஸ்தான்-இ-காபூல்’ என்ற தொலைக்காட்சி தொடரின் படப்பிடிப்பு மும்பையின் வசாய் பகுதியில் நடைபெற்று வந்தது. அப்போது படப்பிடிப்புக்கு மத்தியில் கழிவறையில் துனிஷா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். 

துனிஷாவின் தாயார், தந்து மகளின் மறைவுக்கு காதலனும் சக நடிகருமான ஷீசன் காரணம் என காவல் துறையில் புகாரளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் ஷீசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஷீசனை காவல் துறையினர் இன்று வசாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஷீசனுக்கு வேறு சில பெண்களுடனும் தொடர்பு இருந்ததாக காவல் துறை சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.  

நடிகை துனிஷா இறந்த நாளில், தனது கள்ளக் காதலியுடன் சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு ஷீசன் குறுஞ்செய்திகள் மூலம் உரையாடியதாகவும் காவல் துறையினர் குறிப்பிட்டனர். 

இந்நிலையில் நடிகை துனிஷாவின் உறவினர் ஒருவர் காவல் துறைக்கு கூடுதல் தகவல்களைக் கொடுத்துள்ளார். ஷீசனை சந்தித்தப் பிறகு நடிகை துனிஷா ஹிஜாப் அணிவதை வழக்கமாக்கிக்கொண்டதாகக் குறிப்பிட்டார். இதனால், அனைத்துக் கோணங்களிலும் காவல் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.