யாரெல்லாம் மூக்குவழி கரோனா தடுப்பு மருந்தை செலுத்தலாம்? 

யாரெல்லாம் மூக்குவழி கரோனா தடுப்பு மருந்தை செலுத்தலாம் என்று மருத்துவ நிபுணர் டாக்டர் என்.கே. அரோரா  விளக்கம் அளித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

யாரெல்லாம் மூக்குவழி கரோனா தடுப்பு மருந்தை செலுத்தலாம் என்று மருத்துவ நிபுணர் டாக்டர் என்.கே. அரோரா  விளக்கம் அளித்துள்ளார்.

உலகின் முதல் மூக்குவழி செலுத்தும் ‘இன்கோவாக்’ கரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ளது. அந்தத் தடுப்பு மருந்தை இரு தவணைகளில் பொதுமக்கள் செலுத்திக் கொள்ளலாம்.

இதுமட்டுமின்றி முதல் மற்றும் இரண்டாவது தவணையின்போது செலுத்திக்கொண்ட கரோனா தடுப்பூசிக்கு மாறாக, மூன்றாவது தவணையின்போது (பூஸ்டா்) மூக்குவழி கரோனா தடுப்பு மருந்தை செலுத்திக் கொள்ளலாம். இதற்கு மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘வரும் ஜனவரி மாதம் 4-ஆவது வாரத்தில் மூக்குவழி கரோனா தடுப்பு மருந்து ‘இன்கோவாக்’ பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இந்த மருந்தை அரசுகளுக்கு ரூ.325-க்கும் (ஜிஎஸ்டி இல்லாமல்), தனியாருக்கு ரூ.800-க்கும் (ஜிஎஸ்டி) விற்பனை செய்ய விலை நிா்ணயிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பூசியின் பூஸ்டர் தவணை செலுத்தியவர்கள் மூக்குவழி கரோனா தடுப்பு மருந்தை  பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று இந்தியாவின் கரோனா வைரஸ் பணிக்குழுவின் தேசிய சோதனை ஆலோசனைக் குழுவின் தலைவர் (NTGI) தலைவர் டாக்டர் என்.கே. அரோரா கூறினார். 

இதுவரை தடுப்பூசி செலுத்தக்கொள்ள தயக்கம் உள்ளவர்கள் மூக்குவழி கரோனா தடுப்பு மருந்தை  செலுத்திக் கொள்ளலாம் என அரோரா தெரிவித்தார்.

மேலும், மூக்குவழி கரோனா தடுப்பு மருந்து பலகட்டங்களில் சோதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மருந்தால் எந்தவித பக்கவிளைவும் இல்லை எனவும் டாக்டர் அரோரா தெரிவித்தார்.

இனிவரும் சூழலில் தடுப்பூசிகள் தேவைப்படும் அல்லது தேவைப்படாது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. 5  தடுப்பூசிகளை எடுத்துக் கொண்ட நாடுகளில் கூட, குறிப்பாக வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் மக்கள் தொடர்ந்து தொற்றால் பாதிக்கப்படுகின்றனர் என அரோரா தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com