சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

வட்டியில்லாமல் சொத்து வரி செலுத்துவதற்கான அவகாசம் நீட்டிப்பு!

சென்னை மாநகராட்சியில் வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :28 டிசம்பர் 2022, 1:01 pm IST

சென்னை மாநகராட்சியில் வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்,  துணை மேயர் மகேஷ்குமார் அவர்கள், முதன்மைச் செயலாளர் ககன்சிங் பேடி, நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் சென்னை மாநகராட்சியில் தனி வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மீனம்பாக்கம், சோழிங்கநல்லூரில் புதிய நாய் இனக் கட்டுப்பாடு மையம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பணிகள் துறைக்கு, நகர திட்டமிடல் துறை என பெயர் மாற்றவும், கட்டணங்களை மாற்றி அமைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.