ஒரு யூனிட்டை ரூ. 35-க்கு எந்த மாநிலமும் வாங்கியதில்லை! பெ. சண்முகம் விமர்சனம்!சவூதியில் இலங்கைத் தமிழர் அனோஜனின் மரண தண்டனை ரத்து!போக்ஸோ வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 14)சிஜேபியின் சௌரவ் தாஸ், அஷுதோஷுக்கு 5 நாள்கள் நீதிமன்ற காவல்கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து குழந்தைகள், பெண்கள் உள்பட 14 பேர் பலி!சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

சரிந்து மீளும் பங்குச்சந்தை! ஐடி பங்குகள் லாபம்! ரூபாய் மதிப்பு உயர்வு!

இன்றைய பங்குச்சந்தை வர்த்தகம் பற்றி...

Stock market today

பங்குச்சந்தை - ENS

Published On :

இந்த வாரத்தின் முதல் நாள் இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியடைந்த நிலையில் நேற்று (அக். 13) உயர்வுடன் முடிந்தன.

தொடர்ந்து இன்று (அக். 14) காலை பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியடைந்த நிலையில் தற்போது மீண்டு வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 73,049.76 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.15 மணியளவில் சென்செக்ஸ் 33.73 புள்ளிகள் உயர்ந்து 73,067.51 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 7.75 புள்ளிகள் குறைந்து 22,711.65 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

நிஃப்டி50 குறியீட்டில் ஸ்ரீராம் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், பிஎஸ்இ ஆகியவை அதிக சரிவைச் சந்தித்தன.

நிஃப்டி மிட்கேப், நிஃப்டி ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.27 சதவீதம், 0.16 சதவீதம் சரிந்தன.

துறைவாரியாக, நிஃப்டி பொதுத்துறை வங்கி குறியீடு மிகவும் சரிந்தது. அதே நேரத்தில் நிஃப்டி ஐடி பங்குகள் கணிசமாக உயர்ந்தன. இத்துடன் மீடியா, எஃப்எம்சிஜி பங்குகளும் உயர்ந்தன.

சென்செக்ஸ் 30 பங்குகளில் 10 பங்குகள் உயர்ந்தும் மற்றவை சரிந்து வர்த்தகமாகின்றன.

நாட்டின் பணவீக்கம் அதிகரிப்பு, கச்சா எண்ணெய் விலை உயர்வால் இன்று பங்குச்சந்தைகள் ஏற்ற, இறக்கத்தில் மாறிமாறி வர்த்தகமாகிறது.

வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 94.75 ஆக உயர்ந்துள்ளது. பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 107 டாலராக உள்ளது.

Summary

Stock Market Updates: Sensex, Nifty trade flat; IT, FMCG gain

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.