பங்குச்சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் லாபம்!
இன்றைய பங்குச்சந்தை வர்த்தகம் பற்றி...

கோப்புப் படம் - ANI
இந்திய பங்குச்சந்தைகள் நேற்று கடும் வீழ்ச்சியடைந்த நிலையில் இன்று (அக். 13, செவ்வாய்க்கிழமை) உயர்வுடன் வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 71,951.73 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 10.15 மணியளவில் சென்செக்ஸ் 633.64 புள்ளிகள் உயர்ந்து 72,566.73 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 197.40 புள்ளிகள் உயர்ந்து 22,560.75 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
நிஃப்டி50 குறியீட்டில் எச்.சி.எல். டெக்னாலஜிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் டெக் மஹிந்திரா ஆகியவை அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களாக உள்ளன.
நிஃப்டி மிட்கேப் மற்றும் நிஃப்டி ஸ்மால்கேப் முறையே 0.01 சதவீதம் மற்றும் 1.06 சதவீதம் சரிந்தன.
துறைவாரியாக, நிஃப்டி ஐடி அதிகபட்சமாக உயர்ந்தது. அதே நேரத்தில் நிஃப்டி மீடியா, பார்மா, ஆட்டோ ஆகியவை அதிகபட்சமாக சரிந்தன.
Summary
Stock Market: Sensex at day's high, up 600 pts, Nifty tops 22,550
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

