
பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! பார்மா பங்குகள் மட்டும் சரிவு!
இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிலவரம் பற்றி...

பங்குச்சந்தை - கோப்புப் படம்
நேற்று இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்த இன்று (செப். 16) உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 74,249.31 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.40 மணியளவில் சென்செக்ஸ் 356.56 புள்ளிகள் உயர்ந்து 74,360.38 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 115.60 புள்ளிகள் சரிந்து 23,234.20 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
நிஃப்டி50 குறியீட்டில் நெஸ்லே இந்தியா, ஐடிசி, மஹிந்திரா & மஹிந்திரா ஆகியவை அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களாக உள்ளன.
நிஃப்டி மிட்கேப், நிஃப்டி ஸ்மால்கேப் முறையே 0.25 சதவீதம், 0.56 சதவீதம் சரிந்தன.
துறைவாரியாக, நிஃப்டி எஃப்எம்சிஜி 1 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்தது. அதே நேரத்தில் நிஃப்டி பார்மா கடுமையான சரிவைச் சந்தித்து வருகிறது. பார்மா தவிர மற்ற துறை குறியீடுகள் லாபமடைந்து வருகின்றன.
சென்செக்ஸ் பங்குகளில் பாரதி ஏர்டெல், டாடா ஸ்டீல், என்டிபிசி, ஹெச்டிஎப்சி வங்கி, எட்டர்னல், இண்டிகோ ஆகிய நிறுவனங்கள் சரிந்தும் மற்ற நிறுவனங்கள் உயர்ந்தும் வர்த்தகமாகின்றன.
Summary
Stock Market: Sensex up 300 pts, Nifty around 23,200; Nifty FMCG extends gain
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






