தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, பார்மா பங்குகள் உயர்வு! (ஆக. 26)

இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிலவரம் பற்றி...

Stock Market

பங்குச்சந்தை - ANI

Published On :26 ஆகஸ்ட் 2026, 11:47 am IST

தொடர் சரிவுக்குப் பிறகு நேற்று இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் வர்த்தகமான நிலையில் இன்றும் (ஆக. 26) வர்த்தக தொடக்கத்தில் உயர்ந்து வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 77,892.10 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.40 மணியளவில் சென்செக்ஸ் 100.77 புள்ளிகள் உயர்ந்து 77,756.86 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 23.35 புள்ளிகள் சரிந்து 24,311.20 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

நிஃப்டி50 குறியீட்டில் ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், ஹெச்டிஎப்சி லைஃப் இன்சூரன்ஸ் ஆகியவை அதிக லாபம் ஈட்டின.

சென்செக்ஸ் பங்குகளில் ரிலையன்ஸ், எம்&எம், பெல், எல்&டி, பாரதி ஏர்டெல், இன்போசிஸ், டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்கள் சரிந்தும் மற்ற நிறுவனங்கள் உயர்ந்தும் வர்த்தகமாகின்றன.

நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.19 சதவீதம், ஸ்மால்கேப் குறியீடு 0.51 சதவீதம் உயர்ந்து வர்த்தகமாகிறது.

துறைவாரியாக நிஃப்டி உலோகம், ஆட்டோ பங்குகள் மட்டும் சரிந்த நிலையில் ஐடி, பார்மா, மீடியா, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட மற்ற அனைத்து குறியீடுகளும் உயர்வுடன் வர்த்தகமாகி வருகின்றன.

Summary

Stock Market: Sensex stuck in small range; Nifty SmallCap 100 trades near 52-week high

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.