இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

பங்குச்சந்தை தொடர் சரிவு! ஐடி, பொதுத்துறை வங்கிப் பங்குகள் உயர்வு! (ஆக. 25)

இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிலவரம் பற்றி...

stock market

பங்குச்சந்தை - IANS

Published On :

இந்த வாரத்தில் 2-ம் நாளாக (ஆக. 25, செவ்வாய்க்கிழமை) பங்குச்சந்தை வர்த்தகம் சரிவுடன் தொடங்கியுள்ளது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 77,295.49 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 145.93 புள்ளிகள் சரிந்து 77,223.18 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 70.30 புள்ளிகள் உயர்ந்து 24,148.75 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

நிஃப்டி50 குறியீட்டில் சிப்லா, ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், டாடா நுகர்வோர் பொருள்கள் ஆகியவை அதிக நஷ்டமடைந்த நிறுவனங்களாக உள்ளன.

நிஃப்டி மிட்கேப் மற்றும் நிஃப்டி ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.18 சதவீதம் மற்றும் 0.35 சதவீதம் சரிந்து வர்த்தகமாகின.

துறைவாரியாக, நிஃப்டி ஐடி, பொதுத்துறை வங்கி குறியீடுகள் சிறப்பாகச் செயல்பட்டன, அதேசமயம் நிஃப்டி உலோகம், ஆட்டோ உள்ளிட்ட மற்ற குறியீடுகள் சரிவில் உள்ளன.

30 சென்செக்ஸ் நிறுவனங்களில், இன்ஃபோசிஸ், டிசிஎஸ், டாடா ஸ்டீல், அதானி போர்ட்ஸ் ஆகியவை அதிக லாபம் பெற்றன. பவர் கிரிட், மாருதி, டெக் மஹிந்திரா, சன் பார்மா உள்ளிட்ட நிறுவனங்கள் பின்தங்கியுள்ளன .

Summary

Stock Market: Sensex drops 100 pts, Nifty around 24,150

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.