புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகம்! ஐடி, மீடியா பங்குகள் உயர்வு! (ஆக. 24)

இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிலவரம் பற்றி...

Stock Market

பங்குச்சந்தை - ANI

Published On :

கடந்த வாரம் இந்திய பங்குச்சந்தைகள் சரிந்து மீண்ட நிலையில் இந்த வாரத்தின் முதல் நாளான இன்று (ஆக. 24, திங்கள்கிழமை) பங்குச்சந்தை வர்த்தகம் சரிவுடன் தொடங்கியுள்ளது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 77,629.56 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.15 மணியளவில் சென்செக்ஸ் 99.42 புள்ளிகள் சரிந்து 77,441.41 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 34.70 புள்ளிகள் உயர்ந்து 24,217.30 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

நிஃப்டி50 குறியீட்டில் இன்ஃபோசிஸ், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் மற்றும் எச்.சி.எல். டெக் ஆகியவை அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களாக உள்ளன.

நிஃப்டி மிட்கேப் மற்றும் நிஃப்டி ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.34 சதவீதம் மற்றும் 0.35 சதவீதம் உயர்ந்து வர்த்தகமாகின.

துறைவாரியாக, நிஃப்டி ஐடி, மீடியா சிறப்பாகச் செயல்பட்டன, அதேசமயம் நிஃப்டி பார்மா, ஹெல்த்கேர் உள்ளிட்ட குறியீடுகள் மோசமாகச் செயல்பட்டன.

30 சென்செக்ஸ் நிறுவனங்களில், இன்ஃபோசிஸ், எச்சிஎல் டெக், டாடா ஸ்டீல், டெக் மஹிந்திரா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், எச்டிஎஃப்சி வங்கி ஆகியவை அதிக லாபம் பெற்றன. ஏசியன் பெயின்ட்ஸ், டைட்டன், பவர் கிரிட், பாரத் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவை பின்தங்கி இருந்தன.

Summary

stock market: Sensex, Nifty rise in early trade amid buying in HDFC Bank, Infosys

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.