ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

சரிந்து மீளும் பங்குச்சந்தை! ஆட்டோ, ஐடி பங்குகள் வீழ்ச்சி!

இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிலவரம் பற்றி...

NSE

தேசிய பங்குச்சந்தை - ANI

Published On :

தொடர் சரிவுக்குப் பிறகு நேற்று இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் வர்த்தகமான நிலையில் இன்று (ஆக. 22) சரிந்து மீண்டு வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 77,701.07 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.45 மணியளவில் சென்செக்ஸ் 37.24 புள்ளிகள் உயர்ந்து 77,574.70 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 7.75 புள்ளிகள் உயர்ந்து 24,239.60 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

நிஃப்டி50 குறியீட்டில் எச்.சி.எல். டெக், மாருதி சுசுகி இந்தியா மற்றும் விப்ரோ இந்தியா ஆகியவை அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களாக உள்ளன.

சென்செக்ஸ் பங்குகளில், எட்டர்னல், பெல், டாடா ஸ்டீல், டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தும் ஆக்சிஸ் வங்கி, ஐடிசி, எம்&எம், இன்போசிஸ் ஆகிய நிறுவனங்கள் சரிந்தும் வர்த்தகமாகின்றன.

நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.08 சதவீதம், ஸ்மால்கேப் குறியீடு 0.9 சதவீதம் சரிந்து வர்த்தகமாகிறது.

துறைவாரியாக நிஃப்டி ஐடி, ஆட்டோ, எப்எம்சிஜி பங்குகள் சரிந்துள்ளன. ரியல் எஸ்டேட் பங்குகள் உயர்ந்துள்ளன.

Summary

Stock Market: Sensex, Nifty moves in small range

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.