
பங்குச்சந்தை சென்செக்ஸ், நிஃப்டி தொடர் வீழ்ச்சி! ஆட்டோ, ரியல் எஸ்டேட் பங்குகள் கடும் சரிவு!
இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிலவரம் பற்றி...

பங்குச்சந்தை - IANS
இந்த வாரத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக (செப். 8) பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 75,970.28 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 448.60 புள்ளிகள் சரிந்து 75,684.21 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 111.55 புள்ளிகள் குறைந்து 23,667.60 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
நிஃப்டி50 குறியீட்டில் ஸ்ரீராம் பைனான்ஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டெக் மஹிந்திரா ஆகியவை அதிக சரிவைச் சந்தித்த நிறுவனங்களாக உள்ளன.
நிஃப்டி மிட்கேப் 0.17, நிஃப்டி ஸ்மால்கேப் குறியீடு 0.01 சதவீதம் சரிந்து வர்த்தகமாகிறது.
துறைவாரியாக, நிஃப்டி ஆட்டோ, ரியல் எஸ்டேட் குறியீடு அதிகளவில் சரிந்தும், நிஃப்டி உலோகம், மீடியா பங்குகள் மட்டும் உயர்ந்தும் வர்த்தகமாகின்றன.
அமெரிக்கா - ஈரான் இடையிலான பதற்றம் இந்திய பங்குச்சந்தைகள் சரிவுக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன.
சென்செக்ஸ் 30 நிறுவனங்களில் எட்டர்னல், பெல், அதானி போர்ட்ஸ், டைட்டன், டாடா ஸ்டீல் ஆகிய 5 நிறுவனங்கள் உயர்வுடனும் மற்ற நிறுவனங்கள் அனைத்தும் சரிவுடனும் வர்த்தகமாகின்றன.
Summary
Stock Market: Sensex at day's low, down 400 pts; nifty 23660
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






