தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 700 புள்ளிகள் வரை குறைந்தது!

இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிலவரம் பற்றி...

Stock Market

பங்குச்சந்தை - ANI

Published On :

இந்த வாரத்தில் தொடர்ந்து 3 ஆவது நாளாக இன்றும் (செப். 2) பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 76,471.32 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 11 மணியளவில் சென்செக்ஸ் 635 புள்ளிகள் சரிந்து 76,309.28 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. காலையில் அதிகபட்சமாக சென்செக்ஸ் 700 புள்ளிகள் வரை குறைந்தது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 224.95 புள்ளிகள் குறைந்து 23,830.85 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

நிஃப்டி மிட்கேப் மற்றும் நிஃப்டி ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.98 சதவீதம் மற்றும் 0.56 சதவீதம் சரிந்துள்ளன.

நிஃப்டி50 குறியீட்டில் இன்ஃபோசிஸ், ஈச்சர் மோட்டார்ஸ், ஶ்ரீராம் ஃபைனான்ஸ் ஆகியவை அதிக சரிவைச் சந்தித்தன.

துறைவாரியாக, நிஃப்டி ஐடி 2 சதவீதத்திற்கும் மேல் சரிந்தது. நிஃப்டி ஆட்டோ, எஃப்எம்சிஜி ஆகியவையும் சரிந்தன. அதே சமயம், நிஃப்டி பார்மா, ஹெல்த்கேர் ஆகியவை சிறப்பாகச் செயல்பட்டன.

சென்செக்ஸ் 30 நிறுவனங்களில் அதானி போர்ட்ஸ், சன் பார்மா மட்டும் உயர்வுடனும் மற்ற நிறுவனங்கள் அனைத்தும் சரிவுடனும் வர்த்தகமாகின்றன.

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் இந்திய பங்குச்சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

Summary

Stock Market: Sensex falls 600 pts; nifty below 24,000

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.