
சென்செக்ஸ் 400 புள்ளிகள் வீழ்ச்சி! ஐடி பங்குகள் கடும் சரிவு! இன்றைய பங்குச்சந்தை நிலவரம்
இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிலவரம் பற்றி...

தேசிய பங்குச்சந்தை - ANI
கடந்த வாரத்தில் 4 நாள்கள் பங்குச்சந்தைகள் சரிந்த நிலையில் வார இறுதி நாளில் உயர்வுடன் முடிந்தது.
இந்த வாரத்தின் முதல் நாளான இன்று (செப். 7) பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 76,446.05 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 420.57 புள்ளிகள் சரிந்து 76,094.86 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 128.90 புள்ளிகள் குறைந்து 23,767.65 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
நிஃப்டி50 குறியீட்டில் இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, பஜாஜ் ஆட்டோ ஆகியவை அதிக சரிவைச் சந்தித்த நிறுவனங்களாக உள்ளன.
நிஃப்டி மிட்கேப் 0.15 சதவீதம் சரிந்தது, நிஃப்டி ஸ்மால்கேப் குறியீடு 0.24 சதவீதம் உயர்ந்து வர்த்தகமாகிறது.
துறைவாரியாக, நிஃப்டி ஐடி அதிகளவில் சரிந்தும், நிஃப்டி பார்மா அதிகளவில் உயர்ந்தும் வர்த்தகமாகின்றன. பார்மா தவிர மற்ற துறை குறியீடுகள் அனைத்தும் சரிவில் வர்த்தகமாகின்றன.
அமெரிக்கா - ஈரான் இடையிலான பதற்றம் இந்திய பங்குச்சந்தைகள் சரிவுக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன.
சென்செக்ஸ் 30 நிறுவனங்களில் எட்டர்னல், பஜாஜ் பைனான்ஸ், ஐசிஐசிஐ வங்கி, பாரதி ஏர்டெல், டிரெண்ட், பெல், எல்&டி, டைட்டன், சன் பார்மா ஆகிய 9 நிறுவனங்கள் உயர்வுடனும் மற்ற நிறுவனங்கள் அனைத்தும் சரிவுடனும் வர்த்தகமாகின்றன.
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் இந்திய பங்குச்சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
Summary
Sensex down 400 pts, Nifty near 23,750: US-Iran tensions among key factors behind market decline
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






