
தொடர் வீழ்ச்சியிலிருந்து மீளுமா பங்குச்சந்தை? இன்றைய நிலவரம்!
இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிலவரம் பற்றி...

Sensex, Nifty - IANS
மேற்காசிய போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்வால், இந்தியப் பங்குச் சந்தைகள் கடந்த 3 நாள்களாக தொடர் வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன.
இந்நிலையில் இன்று (செப். 10) பங்குச்சந்தைகள் ஏற்ற, இறக்கத்தில் மாறிமாறி இருந்து வருகின்றன. அதனால் இன்று பங்குச்சந்தை உயர்வுடன் முடியுமா என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 74,742.54 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 37.54 புள்ளிகள் சரிந்து 74,726.69 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 19.40 புள்ளிகள் குறைந்து 23,412.10 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
நிஃப்டி50 குறியீட்டில் மஹிந்திரா & மஹிந்திரா, எடர்னல், ஸ்ரீராம் ஃபைனான்ஸ் ஆகியவை அதிக சரிவைச் சந்தித்தன.
நிஃப்டி மிட்கேப், ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.36 சதவீதம், 0.03 சதவீதம் சரிந்து வர்த்தகமாயின.
துறைவாரியாக, நிஃப்டி பொதுத்துறை வங்கி 1 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்வுடன் வர்த்தகமானது. அதே நேரத்தில் நிஃப்டி ஆட்டோ, உலோகம், பார்மா, ரியல் எஸ்டேட் பங்குகள் சரிந்தன.
பிரென்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 100 டாலரைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Stock Market Update: Nifty below 23,450, Sensex trades lower
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






