விவசாயிகள் வருவாய் குறித்து வெள்ளை அறிக்கை விடுமா பாஜக? காங்கிரஸ் கேள்வி

விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் வாக்குறுதியை அரசு நிறைவேற்றவில்லை என்றும், 2004 முதல் அவர்களின் வருவாய் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
விவசாயிகள் வருவாய் குறித்து வெள்ளை அறிக்கை விடுமா பாஜக? காங்கிரஸ் கேள்வி

புதுதில்லி: விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் வாக்குறுதியை அரசு நிறைவேற்றவில்லை என்றும், 2004 முதல் அவர்களின் வருவாய் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் காங்கிரஸ் இன்று (டிச.29)  குற்றம் சாட்டியுள்ளது.

2022க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்ற பாரதிய ஜனதா கட்சியின் கூற்று வெறும் கட்டுக்கதை என்று அகில இந்திய கிசான் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. உண்மையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அவர்களின் வருமானம் குறைந்துள்ளது என்றார்.

பிப்ரவரி 2016ல் பிரதமர் மோடி விவசாயிகளின் வருமானத்தை 2022க்குள் இரட்டிப்பாக்குவதாக உறுதியளித்தார். அதே வேளையில் பணவீக்கத்தை கணக்கிட்டால், விவசாயிகளின் வருமானம் உண்மையில் குறைந்துள்ளது என்றார் கிசான் காங்கிரஸ் தலைவர் சுக்பால் சிங் கைரா.

பிப்ரவரி 2016ல் பிரதமர் மோடி விவசாயிகளின் வருமானத்தை 2022க்குள் இரட்டிப்பாக்குவதாக உறுதியளித்தார். அதே வேளையில் பணவீக்கத்தை கணக்கிட்டால், விவசாயிகளின் வருமானம் உண்மையில் குறைந்துள்ளது என்றார் கிசான் காங்கிரஸ் தலைவர் சுக்பால் சிங் கைரா.

2018ஆம் ஆண்டின் தேசிய மாதிரி கணக்கெடுப்பை மேற்கோள் காட்டிய அவர், 2004 மற்றும் 2014க்கு இடையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவியிலிருந்த போது, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கியது. மேலும் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையே விவசாயிகளின் வருமானத்தை நிர்ணயிக்கும் அடிப்படை அளவுக்கோளாகும் என்றார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த எட்டு ஆண்டுகளில் இரண்டு முக்கிய பயிர்களான கோதுமை மற்றும் நெல் ஆகியவற்றின் குறைந்தபட்ச ஆதரவு விலையை இரட்டிப்பாக்கியது.

2004ல் காங்கிரஸ் ஆட்சியில் கோதுமைக்கு, குவிண்டால் ஒன்றுக்கு 640 ரூபாயாக இருந்தது. அதே வேளையில் 2013-14 பருவத்தில் அது ரூ.1,400ஆக உயர்ந்தது. அதே போல் 2004ல், நெல்லுக்கு, குவிண்டால் ஒன்றுக்கு, 560 ரூபாயாக இருந்த நிலையில், 2013-14ல் அது ரூ.1,310 ரூபாயாக உயர்ந்தது.

இதற்கு மாறாக, பாஜக ஆட்சியில் நெல் மற்றும் கோதுமை இரண்டிற்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை 50 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்கவில்லை என்றார் கைரா.

சுதந்திரத்திற்குப் பிறகு பூச்சிக்கொல்லிகள், உரங்கள் மற்றும் விவசாயப் பொருட்கள் மீது ஜிஎஸ்டியை விதித்த முதல் ஆட்சி மோடி அரசு தான் என்றார்.

2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் மோடியின் மவுனம் குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ் தலைவர், 2016ஆம் ஆண்டு அதற்காக அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் என்ன ஆனது என்று அவரிடம் கேள்வி எழுப்பினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com