புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் நிர்மலா சீதாராமன்

காய்ச்சல் உள்ளிட்ட உடல்நலக் குறைவு காரணமாக திங்கள்கிழமை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வீடு திரும்பினார்.

News image

நிர்மலா சீதாராமன்

Updated On :29 டிசம்பர் 2022, 12:21 pm

புது தில்லி: காய்ச்சல் உள்ளிட்ட உடல்நலக் குறைவு காரணமாக திங்கள்கிழமை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வீடு திரும்பினார்.

63 வயதாகும் பாஜக மூத்த தலைவரும், மத்திய நிதியமைச்சருமான நிர்மலா சீதாராமன், காய்ச்சல் மற்றும் வயிற்று உபாதை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

மருத்துவமனையில் தனி அறையில் அனுமதிக்கப்பட்டு நிர்மலா சீதாராமன் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையின் பலனாக அவர் குணமடைந்து இன்று வீடு திரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, சனிக்கிழமை சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றிருந்தார். ஞாயிற்றுக்கிழமை முன்னாள் பிரதமர் வாஜ்பாயியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்திலும் நிர்மலா சீதாராமன் மலரஞ்சலி செலுத்தினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.