ஒரு டீ, சமோசாவுக்கு இவ்வளவு விலையா? டிவிட்டரில் பகிரப்பட்ட புகைப்படம்

ஒரு சூடான டீ, இரண்டு சமோசாவுக்கு கிட்டத்தட்ட 500 ரூபாய் செலுத்திய மும்பை வாழ் நபர் ஒருவர் தனது துயரத்தை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். 
ஒரு டீ, சமோசாவுக்கு இவ்வளவு விலையா? டிவிட்டரில் பகிரப்பட்ட புகைப்படம்

ஒரு சூடான டீ, இரண்டு சமோசாவுக்கு கிட்டத்தட்ட 500 ரூபாய் செலுத்திய மும்பை வாழ் நபர் ஒருவர் தனது துயரத்தை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். 

ஒரு கோப்பை சூடான தேநீருன் இரண்டு மொறுமொறு சமோசாக்கள் இருந்தால் போதும் பலருக்கும் அந்த நாளே அழகானதாக மாறிவிடும்.

எத்தனை வேலைப்பளுவுக்கும் இடையே சூடான டீயும், சமோசாவும் செய்யும் அற்புதத்தை யாராலும் மறுக்க முடியாது. ஆனால், அந்த டீயும் சமோசாவுமே ஒரு துயரத்தைக் கொடுத்திருப்பதாக ஒருவர் பதிவிட்டுள்ளார்.

ஊடகவியலாளர் ஃபராஹ் கான் தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் ஒரு பதிவையிட்டுள்ளார். அதில், மும்பை விமான நிலையத்தில் ஒரு தேநீர், இரண்டு சமோசா மற்றும் ஒரு குடிநீர் பாட்டில் வாங்கினேன். இதற்கு ரூ.490 விலையாகக் கொடுத்தேன். இரண்டு சமோசாக்களின் விலை ரூ.260 என்றும், ஒரு தேநீர் சூடான இஞ்சி போட்ட தேநீர் விலை ரூ.160 என்றும் அந்தப் புகைப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேநீர் மற்றும் சமோசாக்களின் விலைகள் டிவிட்டர் பயனாளர்களைக் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்தப் புகைப்படத்தில் இருக்கும் சமோசாக்களும் மிகச் சாதாரண அளவுள்ள சமோசாக்கள்தான். நாட்டிலேயே ஏழை மக்களும் வாங்கும் அளவுக்கு இப்போதைக்கு இருப்பது இந்த இரண்டு உணவுகள்தான். இவையும் விமான நிலையத்தில் இந்த விலைக்கு விற்கிறது என்றால் என பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

இதனை பல லட்சம் பேர் பார்த்து பகிர்ந்து வருகிறார்கள். ஆயிரக்கணக்கானோர் ரீடிவிட் செய்துள்ளனர். வழக்கமாக விமான நிலையத்தில் சமோசா சாப்பிடுபவர்கள் எல்லாம் அதன் விலையை குற்றம்சாட்டமாட்டார்கள் எனவும் சிலர் குறிப்பிட்டுள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com