வந்தே பாரத் விழாவில் ஜெய் ஸ்ரீ ராம் முழக்கம்: மம்தா என்ன செய்தார் தெரியுமா?

 வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கும் விழாவில் பாஜக தொண்டர்களின் செயலால் கோபமடைந்த மம்தா பானர்ஜி விழா மேடையில் அமராமல் பார்வையாளர்களுடன் கீழே அமர்ந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 
வந்தே பாரத் விழாவில் ஜெய் ஸ்ரீ ராம் முழக்கம்: மம்தா என்ன செய்தார் தெரியுமா?

வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கும் விழாவில் பாஜக தொண்டர்களின் செயலால் கோபமடைந்த மம்தா பானர்ஜி விழா மேடையில் அமராமல் பார்வையாளர்களுடன் கீழே அமர்ந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

மேற்குவங்கத்தில் ஹௌராவிலிருந்து நியூ ஜல்பாய்குரிக்கு வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிசம்பர் 30) தொடங்கி வைத்தார். திட்டத்தினை தொடங்கி வைத்த பிரதமர் மோடி நியூ ஜல்பாய்குரி ரயில்வே மறு சீரமைப்புத் திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டினார். நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள ரயில்வே நிலைய வழித்தடங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் பயனளிக்கக் கூடியவை என தெரிவித்தார். 

இந்த நிகழ்ச்சியில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்றார். ரயில்வே நிலையத்தில் திரண்டிருந்த பாஜக தொண்டர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என சத்தமாக முழக்கங்கள் எழுப்பியதால் கோபமடைந்த அவர் விழா மேடையில் அமராமல் பார்வையாளர்களுடன் அமர்ந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் மற்றும் மேற்குவங்க மாநில ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ்  ஆகியோர் முதல்வர் மம்தா பானர்ஜியை சமாதானம் செய்ய முயற்சித்தும் பலனளிக்கவில்லை. 

அதன்பின், காணொலி மூலம் பிரதமர் கலந்து கொண்டவுடன் பார்வையாளர்களுடன் தான் அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து அவர் பேசினார். அப்போது பேசிய அவர், உங்களது தாயாரின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும், உங்களது தாயார் உங்களுக்கு மட்டும் தாயார் அல்ல எங்களுக்கும் தான் எனவும் பேசினார்.

மம்தா பானர்ஜி விழா மேடையில் அமராமல் பார்வையாளர்களுடன் அமர்ந்தது அங்கு சற்று சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com