தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

மேற்கு வங்கத்தில் ரூ.7,800 கோடி திட்டங்கள்: காணொளியில் பங்கேற்று தொடங்கி வைக்கிறார் மோடி!

மேற்கு வங்கத்தில் வந்தே பாரத் ரயில் சேவை உள்பட ரூ.7,800 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம் மற்றும் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (டிச. 30) காணொலி மூலம் பங்கேற்க

News image
கோப்புப்படம்
Updated On :30 டிசம்பர் 2022, 3:53 am

DIN

மேற்கு வங்கத்தில் வந்தே பாரத் ரயில் சேவை உள்பட ரூ.7,800 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம் மற்றும் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (டிச. 30) காணொலி மூலம் பங்கேற்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. 

கொல்கத்தாவில் தேசிய கங்கை கவுன்சிலின் 2-ஆவது கூட்டம் பிரதமா் நரேந்திர தலைமையில் நடைபெறும் எனவும்,  இதில் மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், பிகாா், ஜாா்க்கண்ட், உத்தரகண்ட் மாநில முதல்வா்கள் பங்கேற்க இருப்பதாகவும்,  தகவல்கள் வெளியானது. ரூ.2,500 கோடி மதிப்பிலான பல்வேறு பாதாள சாக்கடை திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறாா்.

இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின்கீழ் முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ரயிலான வந்தே பாரத், மேற்கு வங்கத்தில் முதல்முறையாக இயக்கப்பட இருக்கிறது. ஹௌரா-நியூ ஜல்பைகுரி இடையே இயக்கப்படவுள்ள இந்த ரயிலை பிரதமா் மோடி கொடியசைத்து தொடக்கி வைக்கிறாா். இது தவிர கொல்கத்தா மெட்ரோவின் ஜோகா-தரதாலா இடையிலான வழித்தட சேவையைத் தொடக்கி வைக்கிறாா். மேலும், நிறைவுபெற்ற பல்வேறு ரயில்வே திட்டங்களையும் நாட்டுக்கு அா்ப்பணித்து வைக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானார். 

இதையடுத்து மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திட்டமிட்டப்படி அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெறும். 

பிரதமர் நரேந்திர மோடி  காணொலி மூலம் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று, திட்டங்களை தொடங்கி வைப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இந்த நிலையில் தற்போது, ஹீராபென்னின் இறுதிச் சடங்குகள் நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.