கர்நாடக பேரவைத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டி: அமித்ஷா

கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் பேரவைத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் பேரவைத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக நேற்று பெங்களூரு வந்தார். தொடர்ந்து இன்று பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், தெற்கில் பாஜகவை வலுப்படுத்த வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள கட்சித் தொண்டர்கள் என்னிடம் கூறுகிறார்கள்.

தெற்கில் தாமரை மலர வேண்டும் என்பது கட்சித் தொண்டர்களின் உறுதிமொழி. 

தெற்கே பாஜகவின் நுழைவாயில் கர்நாடகாதான் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். கர்நாடகத்தில் பாஜகவின் அமைப்பு கிராம மட்டத்தை எட்டியுள்ளது. ஜேடிஎஸ் மற்றும் காங்கிரஸால் இவ்வளவு பெரிய பேரணி நடத்த முடியாது என்று என்னால் கூற முடியும். ஜேடி(எஸ்) உடன் தொடர்புடையவர்கள் பாஜக அவர்களுடன் கூட்டணி அமைக்கப் போவதாக வதந்தி பரப்புகின்றனர். 

கர்நாடகாவில் பாஜக தனித்துப் போட்டியிடும் என்றும் மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் என்றும் நான் தெளிவாக கூற விரும்புகிறேன். மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும். சமீபத்தில் நடந்த 7 மாநில தேர்தல்களில் 5 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. 6 மாநிலங்களில் காங்கிரஸ் அழிந்துவிட்டது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com