காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை: கேரள ஆளுநர்

காஷ்மீருக்கு பல சிறப்பான விஷயங்கள் உள்ளன எனவும், அதற்கு சட்டத்தின் மூலம் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை எனவும் கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் தெரிவித்துள்ளார்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை: கேரள ஆளுநர்

காஷ்மீருக்கு பல சிறப்பான விஷயங்கள் உள்ளன எனவும், அதற்கு சட்டத்தின் மூலம் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை எனவும் கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் சூஃபி நிகழ்ச்சி சார்ந்த மாநாடு ஒன்றில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார். ஒருவர் பிறந்த இடத்தைக் கொண்டு சம உரிமை அளிக்காத நிலை மாறி தற்போது சம உரிமையை அனைவரும் அனுபவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கேரள ஆளுநர் ஆரிஃப் கான் கூறியதாவது: மக்களுக்கு நல்லது செய்தால் உங்களுக்கு சிறப்பான இடம் கிடைக்கும் என்ற இயற்கை விதி ஒன்று உள்ளது. எந்த ஒரு சட்டத்தினாலும் அந்த சிறப்பான இடத்தை உங்களிடம் இருந்து பறிக்க முடியாது. இது தான் சூஃபி நமக்கு கற்றுத் தருவது. ஒருவர் எங்கு பிறந்திருக்கிறார் என்பதன் அடிப்படையிலும், எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பதன் அடிப்படையிலும் எந்த ஒரு சிறப்பு அந்தஸ்தும் கிடையாது. காஷ்மீருக்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. சட்டத்தின்  மூலம் எந்த ஒரு சிறப்பு அந்தஸ்தும் காஷ்மீருக்குத் தேவையில்லை.

காஷ்மீர் தன்னுள் கற்றல், கைவினைப் பொருள்கள் செய்தல் மற்றும் கைவினைக் கலைஞர்கள் போன்ற பல சிறப்புகளைப் பெற்றுள்ளது. சில சட்டங்கள் மூலம் காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்கும் என்பது தவறானப் புரிதல். சட்டத்தின் மூலம் எந்த ஒரு மக்களும் சிறப்பு அந்தஸ்தை பெற முடியாது. அதனால், அந்த எண்ணத்தை உங்களது மனதிலிருந்து எடுத்துவிடுங்கள். சட்டம் யாருக்கும் சிறப்பு அந்தஸ்தை கொடுக்காது. மக்களுக்கு அவர்களின் நல்ல செயல்களின் மூலமே சிறப்பு அந்தஸ்து என்பது கிடைக்கும். ஆனால், காஷ்மீர் மக்களின் சிறப்பை யாராலும் முடிவுக்கு கொண்டுவர முடியாது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com