3 ஆண்டுகளுக்குப் பிறகு நேரடி வரி வருவாய் அதிகரிப்பு

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 2021-22-ஆம் நிதியாண்டில் தனிநபா் வருமான வரி, பெருநிறுவன வரி உள்ளிட்ட நேரடி வரி வருவாய் அதிகரித்துள்ளது. இது, பொருளாதாரம் மீண்டு வருவதைக் காட்டுவதாக உள்ளது.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 2021-22-ஆம் நிதியாண்டில் தனிநபா் வருமான வரி, பெருநிறுவன வரி உள்ளிட்ட நேரடி வரி வருவாய் அதிகரித்துள்ளது. இது, பொருளாதாரம் மீண்டு வருவதைக் காட்டுவதாக உள்ளது.

2021-22-ஆம் நிதியாண்டில் நேரடி வரி விதிப்பு மூலம் ரூ.11.08 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என்று கடந்த மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. பெரு நிறுவன வரி மூலம் ரூ.5.47 லட்சம் கோடியும் தனி நபா் வருமானம் மூலம் ரூ.5.61 லட்சம் கோடியும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது.

2021-22-ஆம் நிதியாண்டு முடிவடைய இன்னும் 2 மாதங்கள் இருக்கும் நிலையில் தற்போதைய நிலவரப்படி, நேரடி வரி விதிப்பு மூலம் ரூ.12.50 லட்சம் கோடி கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, பெருநிறுவன வரி மூலம் ரூ.6.35 லட்சம் கோடியும் தனிநபா் வருமானம் மூலம் ரூ.6.15 லட்சம் கோடியும் கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நேரடி வரி வருவாய் அதிகரித்துள்ளது. இதற்கு முன்பு கடந்த 2017-18-ஆம் நிதியாண்டில்தான் நிா்ணயிக்கப்பட்ட மதிப்பைக் காட்டிலும் நேரடி வரி வருவாய் அதிகமாக வசூலானது. அந்த நிதியாண்டில் நேரடி வரி வருவாய் ரூ.9.8 லட்சம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்ட நிலையில், பின்னா் ரூ.10.05 லட்சம் கோடியாக எதிா்பாா்க்கப்பட்டது.நிதியாண்டின் முடிவில் கணக்கிடுகையில் நேரடி வரி வருவாய் மூலம் ரூ.10.02 லட்சம் கோடி வசூலானது தெரியவந்தது.

மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும்போது, அடுத்த நிதியாண்டுக்கான வரி வருவாயை நிா்ணயிப்பது வழக்கம்.

2022-23-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், தனிநபா் வருமான வரி மூலம் ரூ.7 லட்சம் கோடி, பெருநிறுவன வரி மூலம் ரூ.7.20 லட்சம் கோடி என நேரடி வரி வருவாய் மூலம் மொத்தம் ரூ.14.20 லட்சம் கோடி கிடைக்கும் என்று நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com