மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

இந்த மாநிலத்தில் 22 மாதங்களுக்குப் பின் பள்ளிகள் திறப்பு

சரியாக 22 மாதங்களுக்குப் பிறகு, தற்போது  கரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்திருக்கும் நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 17 மாவட்டங்களுக்கு பள்ளிகளைத் திறக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

News image

இந்த மாநிலத்தில் 22 மாதங்களுக்குப் பின் பள்ளிகள் திறப்பு

Updated On :1 பிப்ரவரி 2022, 9:32 am


ராஞ்சி: சரியாக 22 மாதங்களுக்குப் பிறகு, தற்போது  கரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்திருக்கும் நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 17 மாவட்டங்களுக்கு பள்ளிகளைத் திறக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மற்ற 7 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால், ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் நடைபெற்ற மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சந்தைகள் இரவு 8 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு அதிகரித்ததால், மாநில அரசு ஜனவரி 3ஆம் தேதி பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் இதர கல்வி நிலையங்கள் ஜனவரி 31 வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது  குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.