மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பாகிஸ்தானில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு!

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,047 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :2 பிப்ரவரி 2022, 10:56 am

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,047 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பாகிஸ்தானில் தற்போது கரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. அங்கு இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த வாரம் ஒருநாள் பாதிப்பு 7 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்தது. 

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,047 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 14,36,413 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும், 29 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 29,330 ஆக அதிகரித்துள்ளது. 

நேற்று அதிகபட்சமாக 9,590 பேர் உள்பட இதுவரை 13,04,980 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 1,02,103 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.