ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பாஜகவை வீழ்த்த பிராந்தியக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்: மம்தா

2024 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்த பிராந்தியக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :2 பிப்ரவரி 2022, 4:40 pm

DIN


2024 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்த பிராந்தியக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ் தலைவராகப் போட்டியின்றித் தேர்வான பிறகு அவர் பேசியதாவது:

"2024-இல் பாஜகவை வீழ்த்த பிராந்தியக் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும். பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதே நம் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்த முடிந்த நம்மால் தேசிய அளவில் பாஜகவை வீழ்த்த முடியும். மேகாலயா மற்றும் சண்டிகரில் பாஜக வெற்றி பெறுவதற்கு காங்கிரஸ் உதவியுள்ளது.

பாஜகவை எதிர்ப்பவர்கள் அனைவரும் ஒரு தளத்தின்கீழ் வர வேண்டும். யாரேனும் 'ஈகோ' (Ego) காரணத்திற்காக வர மறுத்தால், பிறகு நம்மைக் குற்றம்சாட்டக் கூடாது. தேவைப்பட்டால் பாஜகவுக்கு எதிராக நாம் தனித்துப் போட்டியிடுவோம்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.