ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

‘எங்களுக்கு வாக்களியுங்கள்’: எதிர்க்கட்சித் தொண்டர்களுக்கு கேஜரிவால் வேண்டுகோள்

உங்கள் கட்சியிலிருந்து விலகத் தேவையில்லை, ஆனால் எங்களுக்கு வாக்களியுங்கள் என ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News image
அரவிந்த் கேஜரிவால்
Updated On :3 பிப்ரவரி 2022, 6:30 am

DIN

உங்கள் கட்சியிலிருந்து விலகத் தேவையில்லை, ஆனால் எங்களுக்கு வாக்களியுங்கள் என ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளன. இதில், கோவா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடுகிறது.

இந்நிலையில், இன்று கோவாவில் செய்தியாளர்களை சந்தித்த கேஜரிவால் பேசுகையில்,

பாஜக, காங்கிரஸ் மற்றும் பிற கட்சியை சேர்ந்தவர்கள் உங்கள் கட்சியிலிருந்து விலகி ஆம் ஆத்மியில் இணையத் தேவையில்லை. ஆனால், உங்கள் குழந்தைகள் மற்றும் கோவாவில் நலனுக்காக வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மிக்கு வாக்களிக்க வேண்டுகோள் விடுகிறேன்.

தயவு செய்து உங்கள் கட்சியை தவிர்த்துவிட்டு எங்களுக்கு வாக்களியுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.