உ.பி.யில் போலி தடுப்பூசி உற்பத்தி: 5 பேர் கைது
உத்தரப் பிரதேச காவல்துறையின் சிறப்பு அதிரடிப் படையின் வாராணசி பிரிவு, லங்கா பகுதியில் உள்ள ரோஹித் நகரில் போலி கரோனா தடுப்பூசி மற்றும் சோதனைக் கருவிகளின் உற்பத்திப் பிரிவைக் கண்டுபிடித்துள்ளனர்.


உத்தரப் பிரதேச காவல்துறையின் சிறப்பு அதிரடிப் படையின் வாராணசி பிரிவு, லங்கா பகுதியில் உள்ள ரோஹித் நகரில் போலி கரோனா தடுப்பூசி மற்றும் சோதனைக் கருவிகளின் உற்பத்திப் பிரிவைக் கண்டுபிடித்துள்ளனர்.
காவல்துறையினருக்கு வந்த ரகசிய தகவலின்பேரில், சம்பவ இடத்தை சோதனை செய்தபோது, அப்பகுதியிலிருந்த தடுப்பூசிகள் மற்றும் சோதனை கருவிகளை காவல்துறையினர் மீட்டனர்.
இதையடுத்து 5 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ராகேஷ் தவானி, சந்தீப் சர்மா, லக்ஷ்யா ஜாவா, ஷம்ஷேர் மற்றும் அருணேஷ் விஸ்வகர்மா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
விசாரணையில், தானும் அவரது உதவியாளர்களும் போலி தடுப்பூசி மற்றும் பரிசோதனை கருவிகள் தயாரிப்பதில் ஈடுபட்டதாக ராகேஷ் ஒப்புக்கொண்டார்.
இந்த போலி பொருட்கள் லக்ஷ்யாவுக்கு வழங்கப்பட்டன. மேலும் அவர் தனது நெட்வொர்க் மூலம் வெவ்வேறு மாநிலங்களுக்குச் சரக்குகளை வழங்குவதாகவும் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...