மகாராஷ்டிர மாநிலம் புணேவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த கட்டடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் புணே நகரில் எரவாடா பகுதி சாஸ்த்ரி நகரில் அடுக்குமாடி குடியிருப்புக்கான கட்டடப் பணிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் நேற்று இரவு கட்டடத்தின் தரைத்தளத்தில் உள்ள ஒரு ஸ்லாப் இடிந்து விழுந்ததில் அங்குள்ள தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். தகவலறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து புணே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழிலாளர்கள் பலியானதற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பூந்தொட்டியில் மறைந்திருந்த பாம்பு! பத்திரமாக மீட்பு! | CBE

இம்பாக்ட் வீரராக களமிறக்கப்பட்ட ஷர்துல் தாக்குரின் வித்தியாசமான சாதனை..! கோபத்தில் மும்பை ரசிகர்கள்!

காங்கிரஸ் பயிற்சி முகாமில் ராகுல் பங்கேற்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


