விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சீனாவின் அச்சுறுத்தும் போக்கு: இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு

கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020-இல் நடந்த மோதலில் பங்கேற்ற சீன ராணுவ வீரரை ஒலிம்பிக் ஜோதியை ஏந்துவதற்கு களமிறக்கி சீனா அச்சுறுத்தல் விடுத்துள்ள நிலையில் இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது

News image
Updated On :4 பிப்ரவரி 2022, 6:42 pm

DIN

கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020-இல் நடந்த மோதலில் பங்கேற்ற சீன ராணுவ வீரரை ஒலிம்பிக் ஜோதியை ஏந்துவதற்கு களமிறக்கி சீனா அச்சுறுத்தல் விடுத்துள்ள நிலையில் இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.

கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020-இல் இந்திய ராணுவத்துக்கும் சீன ராணுவத்துக்கும் இடையே நடந்த மோதலில் இந்திய வீரா்கள் 20 போ் உயிரிழந்தனா். இந்த மோதலில் ஈடுபட்ட சீன ராணுவ அதிகாரி கி ஃபாபோவை, பெய்ஜிங்கில் நடைபெறும் குளிா்கால ஒலிம்பிக் போட்டியின் ஜோதியை ஏந்திச் செல்வதற்கு சீனா தோ்வு செய்தது. சீனாவின் இந்தச் செயல், இந்திய அரசை அதிருப்தி அடையச் செய்துள்ளது. இதனால், குளிா்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவை புறக்கணிப்பதாக இந்தியத் தூதரகம் அறிவித்தது.

இந்நிலையில், வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் நெட் பிரைஸ், வியாழக்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்தபோது இதுகுறித்து கூறியதாவது:

அண்டை நாடுகளை சீனா அச்சுறுத்தி வருவதற்கு எதிராக ஏற்கெனவே அமெரிக்கா குரல் கொடுத்துள்ளது. இந்திய-சீன எல்லை விவகாரத்தில் இரு நாடுகளும் நேரடியாகப் பேச்சுவாா்த்தை நடத்தி சுமூகத் தீா்வு எட்டுவதற்கு அமெரிக்கா தொடா்ந்து ஆதரவு அளிக்கிறது. மேலும், இந்திய-பசிபிக் பிராந்தியத்தின் வளம், பாதுகாப்பு ஆகியவற்றுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது என்றாா் அவா்.

இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் சீனா ஆதிக்கம் செலுத்த முயன்று வரும் நிலையில், சுதந்திரமான, தடையற்ற கடல் போக்குவரத்தை உறுதிசெய்வது குறித்து இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடா்ந்து பேசி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.