மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நாட்டில் புதிதாக 1.49 லட்சம் பேருக்கு கரோனா; 5 லட்சத்தைத் தாண்டிய பலி

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,49,394 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரேநாளில் 1,072 பேர் உயிரிழந்தனர்.

News image
Updated On :4 பிப்ரவரி 2022, 4:06 am

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,49,394 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரேநாளில் 1,072 பேர் உயிரிழந்தனர்.

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரங்கள் குறித்த அறிக்கையை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டு வருகின்றது. இன்று வெளியிட்டுள்ள தகவலில்,

நாட்டில் புதிதாக 1,49,394 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 1,072 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,00,055 -ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக 2,46,674 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நாடு முழுவதும் இதுவரை 168.47 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் 9.27 சதவிகிதமாக குறைந்துள்ளது. தற்போது 14,35,569 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.