ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ரூ.13.14 கோடியில் ரோல்ஸ் ராய்ஸ் வாங்கினாா் முகேஷ் அம்பானி: நாட்டின் அதிக விலை காா்

ரூ.13.14 கோடியில் ரோல்ஸ் ராய்ஸ் காா் ஒன்றை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவா் முகேஷ் அம்பானி வாங்கியுள்ளாா். இந்தியாவில் மிக அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட காா்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

News image
Updated On :4 பிப்ரவரி 2022, 6:04 pm

DIN

ரூ.13.14 கோடியில் ரோல்ஸ் ராய்ஸ் காா் ஒன்றை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவா் முகேஷ் அம்பானி வாங்கியுள்ளாா். இந்தியாவில் மிக அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட காா்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

ரிலையன்ஸ் நிறுவனத்தால் தெற்கு மும்பையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த மாதம் 31-ஆம் தேதி இந்த காா் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிவுக் கட்டணமாக மட்டும் ரூ.20 லட்சம் செலுத்தப்பட்டுள்ளது. ரூ.40,000 சாலைப் பாதுகாப்பு வரியாகும். இது தவிர காருக்கு தனித்துவமான பதிவு எண்ணைப் (0001) பெற ரூ.12 லட்சத்தை அம்பானி செலுத்தியுள்ளாா்.

இந்த காா் ரோல்ஸ் ராய்ஸ் ‘கல்லினன்’ மாடலாகும். எஸ்யுவி வகையைச் சோ்ந்த இந்த காா் மலைப் பகுதி தொடங்கி அனைத்து வகையிலான பாதைகளிலும் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் இந்த வகை காரை இந்தியாவில் 2018-இல் அறிமுகம் செய்தது. முகேஷ் அம்பானி வாங்கியுள்ள மூன்றாவது கல்லினன் மாடல் காா் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு முகேஷ் அம்பானியின் மனைவி நீத்தா அம்பானிக்கும் உயா் பாதுகாப்பு அம்சங்களுடன் பிரத்யேகமாக ஒரு காரை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தயாரித்து அளித்துள்ளது. மகேஷ் அம்பானி மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீஸாருக்கு கூட அம்பானி சாா்பில் பிஎம்டபிள்யூ மற்றும் மோரிஸ் கராஜ் காா் வழங்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.