தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

காங்கிரஸை தோற்கடிக்க.. ராஜஸ்தான் பாஜக தலைவரின் விநோத சபதம்?

காங்கிரஸ் கட்சியைத் தோற்கடிக்கும் வரை மாலையோ, தலைப்பாகையோ அணியப்போவதில்லை என்று சபதம் எடுத்துள்ளார்.

News image

ராஜஸ்தான் பாஜக தலைவரின் விநோத சபதம்?

Updated On :4 பிப்ரவரி 2022, 6:49 am


அலிகார்; ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் சதீஷ் பூனியா, வரும் 2023ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியைத் தோற்கடிக்கும் வரை மாலையோ, தலைப்பாகையோ அணியப்போவதில்லை என்று சபதம் எடுத்துள்ளார்.

அலிகார் அருகே நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிய சதீஷ் பூனியா, வரும் 2023ஆம் ஆண்டு ராஜஸ்தான் பேரவைக்கு நடைபெறும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்து, பெரும்பான்மை பலத்துடன் பாஜக ஆட்சியமைக்கும் வரை, மாலையோ, தலைப்பாகையோ அணியப்போவதில்லை என்று சபதம் எடுத்துள்ளேன். அது மட்டுமல்ல, அதுவரை இரவு உணவு கூட எடுத்துக் கொள்ள மாட்டேன் என்று கூறினார்.

ராஜஸ்தான் பேரவைக்கு வரும் 2023ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. 

கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில், 199 தொகுதிகளில், 99 இடங்களில் வென்று காங்கிரஸ் கட்சி, பாஜகவிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.