கானா வினோத், புகழ், மாகாபா ஆகியோர் தன்னை தாக்கியதாக பிக்பாஸ் பிரபலம் திவாகர் போலீஸில் புகாரளித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 7வது சீசன் ஏப்ரல் 4 அன்று தொடங்கியது. பிரபலமான இந்த நிகழ்ச்சியில் இந்த முறை திருமணமான ஜோடிகளும் அவர்களுடன் இணைந்து கோமாளிகளும் சமைக்கும் விதமாக நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த நிலையில், நிகழ்ச்சியின் படப்பிடிப்பின் போது இந்த வாரம் ஒரு பரபரப்பான சம்பவம் நடைபெற்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் பிரபலமும் பாடகருமான கானா வினோத், விஜய் டிவி புகழ், மாகாபா ஆனந்த் ஆகிய 3 பேரும் இணைந்து பிக் பாஸ், இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமான திவாகரை குக் வித் கோமாளி நிகழ்ச்சி அரங்கில் வைத்து அடித்ததாக அவர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
இதுபற்றி திவாகர் வெளியிட்ட விடியோவில், “குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஏப்ரல் 10 அன்று கலந்துகொண்டேன். அங்கு கானா வினோத் என்னைப் பற்றியும் என் குடும்பத்தைப் பற்றியும் தகாத வார்த்தகளில் பேசினார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பேசியதால் கானா வினோத், புகழ் இணைந்து என்னை அடித்தனர்.
இவர்களுடன் மாகாபா ஆனந்த் குடிபோதையில் என்னை இரும்பு கம்பியால் அடித்தார். அவர் அடித்ததில் என் காலில் ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஈவிபி ஃபிலிம் சிட்டி அருகே உள்ள காவல் நிலையத்தில் இதுபற்றி புகாரளித்துள்ளேன்” என்று தெரிவித்தார்.
Summary
Attack on Bigg Boss Celebrity: Police Complaint Filed Against Gana Vinoth, Pugazh, and Ma Ka Pa Anand.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓமலூரில் 2 குழந்தைகளுடன் தாயை காணவில்லை என போலீஸில் புகாா்

பிக் பாஸ் பிரபலம் எல்விஷ் யாதவிடம் ரூ.10 கோடி கேட்டு பிஷ்னோய் கும்பல் மிரட்டல்

எம். எஸ். சுப்புலட்சுமி - நான் சந்தித்த பிரபலங்கள் - 57
கோயிலில் திருட முயன்றவா் போலீஸில் ஒப்படைப்பு
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை


