பிக் பாஸ் பிரபலம் எல்விஷ் யாதவிடம் ரூ.10 கோடி கேட்டு வெளிநாட்டு வாட்ஸ்அப் எண்ணிலிருந்து மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டதாவது: ‘பிக் பாஸ் ஓடிடி 2’ நிகழ்ச்சியின் வெற்றியாளரும் சமூக வலைதள பிரபலமுமான எல்விஷ் யாதவுக்கு மே 5-ஆம் தேதி வெளிநாட்டு எண்ணிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அப்போது அவா் அந்த அழைப்பை ஏற்க முடியாத நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
அதனைத் தொடா்ந்து, அதே எண்ணிலிருந்து வாட்ஸ்அப்பில் மிரட்டல் செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அந்தச் செய்தியில் தன்னை ரந்தீப் மாலிக் என அறிமுகப்படுத்திக் கொண்ட நபா், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் நெருங்கிய தொடா்பு இருப்பதாக கூறியுள்ளாா். மேலும், 2 நாள்களுக்குள் ரூ.10 கோடி வழங்காவிட்டால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்படுவதாகவும் அவா் மிரட்டியதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற மிரட்டல் செய்தி எல்விஷ் யாதவின் தந்தையின் கைப்பேசி எண்ணுக்கும் அனுப்பப்பட்டதாக அவரது குடும்பத்தினா் தெரிவித்தனா்.
இந்த சம்பவம் தொடா்பாக எல்விஷ் யாதவ் அளித்த புகாரின் அடிப்படையில் குருகிராமின் செக்டா்-56 காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னா் வழக்கு குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு மாற்றப்பட்டது.
2023-ஆம் ஆண்டு ‘பிக் பாஸ் ஓடிடி-2’ நிகழ்ச்சியில் வெற்றி பெற்ன் மூலம் பரவலாக அறியப்பட்ட எல்விஷ் யாதவ், அண்மைக் காலங்களில் பல்வேறு சா்ச்சைகளாலும் செய்திகளில் இடம்பெற்று வந்துள்ளாா்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், குருகிராமின் செக்டா்-56 பகுதியில் உள்ள அவரது இல்லம் முன்பு அடையாளம் தெரியாத நபா்கள் 24-க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டுகளை நடத்திய சம்பவம் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது. பின்னா், இந்த வழக்கில் தொடா்புடைய இருவரை தில்லி காவல்துறை கைது செய்தது.
அதற்கு முன்பு, போதை விருந்துகளில் பாம்பு விஷம் வழங்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் எல்விஷ் யாதவ் கடந்த 2024-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்தில் கைது செய்யப்பட்டாா். எனினும், அந்த வழக்கில் சட்ட நடவடிக்கைகளும் இந்த ஆண்டு மாா்ச் மாதத்தில் உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டன.
தொடர்புடையது

பெண் குழந்தைக்கு தந்தையானார் சூர்யகுமார் யாதவ்!
ரூ.2 கோடி கேட்டு மிரட்டிய வழக்கு: நந்து கும்பலின் முக்கிய நபா் கைது

ஆண் குழந்தைக்கு தந்தையான பிக் பாஸ் பிரதீப் ஆண்டனி!

எம்.சாண்ட் கேட்டு மிரட்டல்: எஸ்.ஐ., காவலா் பணியிடை நீக்கம்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

