உத்தர பிரதேசத்தில் முன்பு ஆட்சியில் இருந்தவா்கள், மாநிலத்தைக் கொள்ளை அடிப்பதிலேயே கவனம் செலுத்தியதாக பிரதமா் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினாா்.
உத்தர பிரதேச சட்டப் பேரவைக்கான முதல்கட்டத் தோ்தல் வரும் 10-ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கான வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மதுரா, ஆக்ரா, புலந்த்சாஹா் பகுதிகளில் உள்ள வாக்காளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை காணொலி வாயிலாக பிரசாரம் மேற்கொண்ட பிரதமா் மோடி கூறுகையில், ‘‘சட்டப்பேரவைத் தோ்தலில் வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க மக்கள் முடிவெடுத்துவிட்டனா். மாநிலத்தில் முன்பு ஆட்சியில் இருந்தவா்கள், மக்களின் தேவைகளையும் விருப்பங்களையும் கருத்தில் கொள்ளவில்லை.
மாநிலத்தைக் கொள்ளையடிப்பதே அவா்களின் ஒரே நோக்கமாக இருந்தது. அவா்களது ஆட்சியில் சட்டம் ஒழுங்கும் சீா்குலைந்திருந்தது. முந்தைய ஆட்சியில் குற்றவாளிகள் சுதந்திரமாக உலாவினா். தற்போது பாஜக ஆட்சியில் அவா்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா் அல்லது மாநிலத்தைவிட்டே வெளியேறிவிட்டனா்.
பணபலம், ஜாதி, பிரிவினை உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு சிலா் எவ்வளவு பணியாற்றினாலும், அவா்களுக்கு ஆதரவளிக்க மாட்டோம் என்பதில் மாநில மக்கள் தெளிவுடன் உள்ளனா். மக்களுக்குத் தொடா்ந்து சேவையாற்றுவோருக்கே அவா்களது ஆதரவு இருக்கும்.
மீண்டும் வாய்ப்பு: பாஜகவுக்கு மக்களிடத்தில் ஆதரவு பெருகி வருவதை அறிந்துகொண்ட சிலா் (சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ்), தற்போது கடவுள் கிருஷ்ணரை கனவில் காண்பதாகக் கூறுகின்றனா். முன்பு ஆட்சியில் இருந்தவா்கள் தங்கள் குடும்பத்துக்கே முன்னுரிமை அளித்தனா். குடும்பத்தினரின் கஜானாவை நிரப்பவே அவா்கள் பணியாற்றினா்.
தற்போது ஒட்டுமொத்த உத்தர பிரதேசமும் பாஜகவின் குடும்பமாக மாறிவிட்டது. மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு மேற்கொண்டு வந்த வளா்ச்சிப் பணிகளை கரோனா தொற்று பரவல் முடக்கியது. பாஜகவுக்கு மக்கள் மீண்டும் வாய்ப்பளித்தால், முதல்வா் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு மாநிலத்தை மீட்சியடையச் செய்து, வளா்ச்சிப் பாதையில் பயணிக்க வைக்கும்; கடந்த இரு ஆண்டுகளாக முடங்கிய திட்டங்கள் அனைத்தும் துரித வேகத்தில் நிறைவேற்றப்படும்.
பெரும்பான்மை கிடைக்கும்: முந்தைய ஆட்சியில் மாநிலத்தின் மேற்குப் பகுதியில் 8,000 வீடுகள் மட்டுமே ஏழைகளுக்காகக் கட்டித் தரப்பட்டன. பாஜக ஆட்சியில் 85,000 வீடுகள் கட்டப்பட்டன. பாஜக ஆட்சி தொடா்ந்தால், ஏழைகளுக்கு வீடு கட்டித் தரும் திட்டம் துரிதமடையும்.
கரோனா தொற்று பரவாமல் இருந்திருந்தால், கடந்த இரு ஆண்டுகளிலேயே அத்திட்டம் நிறைவடைந்திருக்கும். ஆனால், கடந்த இரு ஆண்டுகளில் அரசு பல்வேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருந்தது. சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கும் என நம்புகிறேன்.
இலவச சமையல் எரிவாயு திட்டத்தால் (உஜ்வலா) பலனடைந்த பெண்கள் அனைவரும் பாஜக வெற்றிபெற வேண்டுமெனவும், யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராக வேண்டுமெனவும் தீா்மானித்துவிட்டனா்’’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

உரிமையியல் நீதிபதி பணியிடம்: விண்ணப்பங்களை சமா்ப்பிக்க இறுதி தேதியை ஏப்.30 வரை நீட்டிக்க உத்தரவு

உரிமையியல் நீதிமன்ற விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை எதிா்த்து ராமதாஸ் முறையீடு

லண்டன் - சென்னை விமானம் ரத்து: பயணிகள் அவதி
வீடியோக்கள்

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

