அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

விமான நிலையத்துக்காக ஏழை மக்களை வெளியேற்றுவதா?: மம்தா குற்றச்சாட்டு

விமான நிலையம் கட்டுவதற்காக ஏழை மக்களை அவர்களது இருப்பிடத்திலிருந்து வெளியேற்றுவதா என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். 

News image
Updated On :7 பிப்ரவரி 2022, 11:43 am

DIN

விமான நிலையம் கட்டுவதற்காக ஏழை மக்களை அவர்களது இருப்பிடத்திலிருந்து வெளியேற்றுவதா என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். 

கொல்கத்தாவில் இரண்டாவது விமான நிலையம் கட்டுவதற்கு மேற்கு வங்க அரசு இடம் கொடுக்கவில்லை என்று மத்திய அரசு குற்றம் சாட்டியது. 

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் ஏற்கெனவே விமான நிலையம் உள்ளபோது, சொகுசு வசதிகளுடன் இரண்டாவது விமான நிலையம் கட்டுவதற்கு அவர்களுக்கு (பாஜக) 1000 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. 

அந்த நிலப்பரப்பிற்குள் வரும் பகுதிகளைச் சேர்ந்த மக்களின் வீடுகளை இடிக்கவா முடியும். விமானத் துறை அமைச்சர் இந்த விவகாரத்தில் அரசியல் செய்யக்கூடாது. அவர்கள் விவசாயிகளைக் கொன்றது போன்று என்னால் ஏழைகளைக் கொல்லமுடியாது என்று சாடியுள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.