தில்லியில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திங்கள்கிழமை முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
தில்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சமீபத்திய வழிகாட்டுதலின்படி, 50 சதவீத மாணவர்களுடனும், கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தில்லி சர்வோதயா கன்யா வித்யாலயாவில் 9 முதல் 12ஆம் வகுப்புகள் வரை உள்ள மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், துணை முதல்வரும், கல்வி அமைச்சருமான மணீஷ் சிசோடியா மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஆன்லைன் வகுப்புகள் மாற்றுவழி தான். நேரடி வகுப்புகள் மீண்டும் தொடங்க நாங்கள் ஆவலுடன் காத்திருந்தோம். மாணவர்களுடன் கலந்துரையாடுகையில், நேரடி வகுப்புகள் சிறப்பாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தனர். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருவருக்கொருவர் நேரடி கலந்துரையாடல் என்பது மிகவும் அவசியம்.
மேலும், 95 சதவீதத்திற்கும் அதிகமான அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், 50 சதவீத தனியார் பள்ளி மாணவர்களுக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். தடுப்பூசி போடப்பட்ட மாணவர்கள் மட்டுமே பள்ளிகளில் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று வரையறை இல்லை. ஆசிரியர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
பள்ளி மாணவர்கள் அனைவரும், சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அவர் கூறினார்.
ஐந்து சதவீதத்திற்கும் குறைவான கரோனா தொற்று உள்ள மாவட்டங்களில் பள்ளிகளை மீண்டும் திறப்பது பற்றி யோசிக்கலாம், ஆனால் இது தொடர்பாக மாநில அரசுகள்தான் அழைப்பு விடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

13,380 mAh பேட்டரி, 12ஜிபி ரேம்.. ஒன்பிளஸ் டேப்லெட் பேட் 4-ல் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

ரியான் பராக் சம்பளத்தில் 25% 'கட்'? ராஜஸ்தான் அணிக்குத் தொடரும் அபராதங்கள்!

கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


