வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

உண்மையிலேயே நாட்டில் கரோனா பரவல் குறைந்துவருகிறதா?

கேரளம், மிசோரம் போன்ற ஒரு சில மாநிலங்களில் மட்டும் கரோனா உறுதியாகும் விகிதம் கவலையளிக்கும் வகையில் இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News image
நாட்டில் கரோனா பரவல் குறைந்துவருகிறதா?
Updated On :10 பிப்ரவரி 2022, 12:38 pm

PTI


புது தில்லி: நாடு முழுவதும் கரோனா பரவல் நம்பிக்கையளிக்கும் வகையில் இருப்பதாகவும், கேரளம், மிசோரம் போன்ற ஒரு சில மாநிலங்களில் மட்டும் கரோனா உறுதியாகும் விகிதம் கவலையளிக்கும் வகையில் இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், அனைத்து மாநிலங்களின் புள்ளிவிவரங்களையும் ஆய்வு செய்யும்போது, சமார் 40 மாவட்டங்களில் மட்டும் தொடர்ந்து வாராந்திர கரோனா பாதிப்பு அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது. அந்த மாவட்டங்களி, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் 141 மாவட்டங்களில் கரோனா உறுதியாகும் விகிதம் 10 சதவீதத்துக்கு மேல் உள்ளது, 160 மாவட்டங்களில் 5 - 10 சதவீதத்துக்குள் இருக்கிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டிலேயே கேரளம், மகாராஷ்டிரம், தமிழகம், கர்நாடகத்தில் 50 ஆயிரத்தக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் உள்ளனர். கேரளத்தில் கரோனா உறுதியாகும் விகிதம் 29.57 சதவீதமாக உள்ளது.  இதுபோல, மிசோரம், இமாசலம், அருணாசலத்திலும் கரோனா உறுதியாகும் விகிதம் கவலைதரும் அளவிலேயே இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.