நேபாளத்தில் டாங் மாவட்டத்தில் உள்ள ஷூ கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
தீ விபத்து குறித்து துளசிபூர் டிஎஸ்பி ஷியாமு ஆர்யால் கூறுகையில்,
துளசிபூர் பகுதியில் உள்ள ஷூ கடையில் இன்று அதிகாலை 2.00 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் 7.30 மணியளவில் தீயில் சிக்கி உயிரிழந்த உடல்களை மீட்டனர். இரண்டாவது தளத்தில் 3 உடல்களையும், 4வது தளத்தில் இரண்டு உடல்களையும் மீட்டனர் .
இந்த விபத்தில் உயிரிழந்த 5 பேரில் 4 பேர் 15 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார்.
உயிரிழந்தவர்கள் 13 வயதான சஜிதா கதுன், ஹசன் பக்ஷ் (14), மசின் பக்ஷ்(15) , நஜர்தீன் அலி (40) மற்றும் அபிதீன் அலி (5) என காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். உயிரிழந்த 5 பேரும் மூச்சுத்திணறலால் இறந்துள்ளனர்.
தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் படத்தின் பெயர் அறிவிப்பு!

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
மே நாள் வாழ்த்து: உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக அணி திரள்வோம்! - பெ. சண்முகம்

தங்கம் - வெள்ளி: இன்றைய நிலவரம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


