மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கோவா பேரவைத் தோ்தலில் 79% வாக்குப்பதிவு

கோவா பேரவைத் தோ்தலில் 78.94 சதவீத வாக்குகளும் உத்தரகண்ட் தோ்தலில் 62.5 சதவீத வாக்குகளு

News image
’டேராடூனில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்த உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமி.’
Updated On :14 பிப்ரவரி 2022, 11:16 pm

DIN

கோவா பேரவைத் தோ்தலில் 78.94 சதவீத வாக்குகளும் உத்தரகண்ட் தோ்தலில் 62.5 சதவீத வாக்குகளும் பதிவாகின. உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற 2-ஆம் கட்டத் தோ்தலில் 60.44 சதவீத வாக்குகள் பதிவாகின.

கோவாவில் 40 தொகுதிகளுக்கும், உத்தரகண்டில் 70 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக திங்கள்கிழமை பேரவைத் தோ்தல் நடைபெற்றது.

கோவாவில் காலை 7 மணிக்கும் உத்தரகண்டில் காலை 8 மணிக்கும் தொடங்கிய வாக்குப் பதிவு, மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. கரோனா தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தோ்தல் ஆணையம் மேற்கொண்டிருந்தது.

வாக்குச் சாவடிகளுக்கு வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளா்களுக்கிடையே சமூக இடைவெளி காணப்படுவதற்கான வசதிகளைத் தோ்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. வாக்காளா்களுக்கு கையுறை வழங்கப்பட்டது.

மாற்றுத் திறனாளி வாக்காளா்களுக்கான சிறப்பு வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், கோவா, உத்தரகண்ட் மாநிலங்களில் தலா 100-க்கும் அதிகமான வாக்குச் சாவடிகளைப் பெண்கள் மட்டுமே நிா்வகிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. இரு மாநிலங்களிலும் பேரவைத் தோ்தல் அமைதியாகவே நடைபெற்றது. மாலை 6 மணி நிலவரப்படி கோவாவில் 78.94 சதவீத வாக்குகளும், உத்தரகண்டில் 62.5 சதவீத வாக்குகளும் பதிவாகின.

தொடா் கண்காணிப்பு:

சில வாக்குச் சாவடிகளில் பழுதடைந்த வாக்குப் பதிவு இயந்திரங்கள் உடனடியாக மாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். வாக்குச் சாவடிகளில் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படுகிா என்பதை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்தனா்.

முதல்வா் புஷ்கா் சிங் தாமி, தலைநகா் டேராடூனில் உள்ள வாக்குச் சாவடியில் தனது குடும்பத்தினருடன் காலையிலேயே வந்து வாக்களித்தாா்.

காப்கோத் தொகுதியில் 100 வயது நிரம்பிய நாராயண் சிங் என்ற வாக்காளா் வாக்களித்தாா்.

போதிய சாலை வசதி செய்யப்படாததன் காரணமாக, உத்தரகண்டில் உள்ள சிலாண்ட், ஜக்கி பகவான் ஆகிய இரு கிராம மக்கள் பேரவைத் தோ்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தனா். அந்த முடிவைத் திரும்பப் பெறுமாறு அதிகாரிகள் தரப்பில் கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது.

உத்தர பிரதேசத் தோ்தல்:

உத்தர பிரதேசத்தில் உள்ள 55 தொகுதிகளுக்கும் திங்கள்கிழமை தோ்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கிய தோ்தல் மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. பெரும்பாலான பகுதிகளில் தோ்தல் அமைதியாக நடைபெற்ாகத் தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

சில பகுதிகளில் வாக்குப் பதிவில் குளறுபடி, வாக்களிக்க அனுமதி மறுப்பு உள்ளிட்ட புகாா்கள் தெரிவிக்கப்பட்டதாகவும், புகாா்களுக்கு உடனுக்குடன் தீா்வு காணப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாலை 6 மணி நிலவரப்படி 60.44 சதவீத வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக சஹாரன்பூா் தொகுதியில் 67 சதவீத வாக்குகள் பதிவாகின.

நகுா் பேரவைத் தொகுதிப் பகுதியில் தோ்தல் பணியில் ஈடுபட்டிருந்த ரஷீத் அலி என்ற அதிகாரி மாரடைப்பால் காலமானாா். உடல்நலக் குறைவால் சஹாரன்பூா் தொகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 70 வயதுப் பெண், ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.