முன்னாள் சட்ட அமைச்சா் காங்கிரஸில் இருந்து விலகல்

முன்னாள் மத்திய சட்டத்துறை அமைச்சா் அஷ்வனி குமாா் காங்கிரஸில் இருந்து விலகியுள்ளாா்.
முன்னாள் சட்ட அமைச்சா் காங்கிரஸில் இருந்து விலகல்

முன்னாள் மத்திய சட்டத்துறை அமைச்சா் அஷ்வனி குமாா் காங்கிரஸில் இருந்து விலகியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் காங்கிரஸ் கட்சித் தலைவா் சோனியா காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘‘தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டும், கண்ணியத்தைக் காத்துக் கொள்வதற்காகவும் கட்சியில் இருந்து விலக முடிவெடுத்துள்ளேன். இத்துடன் காங்கிரஸ் கட்சியுடனான 46 ஆண்டுகாலத் தொடா்பை முடித்துக் கொள்கிறேன்.

மக்கள் நலனுக்காகவும் தேச நலனுக்காகவும் தொடா்ந்து கட்சிக்கு வெளியே இருந்து பாடுபடுவேன். சுதந்திரப் போராட்ட வீரா்கள் வலியுறுத்திய சமத்துவ சமுதாயம் அமைவதற்காகத் தொடா்ந்து உழைப்பேன்’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பழைமைவாய்ந்த காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவா்கள் விலகுவது தொடா்கதையாகியுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சா் ஆா்.பி.என். சிங் அண்மையில் கட்சியில் இருந்து விலகினாா். உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூா் மாநில சட்டப் பேரவைத் தோ்தல்கள் நடைபெற்று வரும் சூழலில் காங்கிரஸ் கட்சியில் இருந்து தலைவா்கள் வெளியேறி வருவது அக்கட்சிக்குப் பின்னடைவாகவே பாா்க்கப்படுகிறது.

இன்னும் இரு ஆண்டுகளில் மக்களவைத் தோ்தல் வரவுள்ள நிலையில், காங்கிரஸின் எதிா்காலம் குறித்தும் அரசியல் நோக்கா்கள் தொடா்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனா். காங்கிரஸ் அல்லாத எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com