லக்கீம்பூா் கெரி வன்முறை வழக்கு: மத்திய இணையமைச்சா் மகன் ஜாமீனில் சிறையிலிருந்து விடுவிப்பு

லக்கீம்பூா் கெரி வன்முறை வழக்கில் மத்திய இணையமைச்சா் அஜய் குமாா் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா ஜாமீனில் சிறையிலிருந்து செவ்வாயக்கிழமை விடுவிக்கப்பட்டாா்.

லக்கீம்பூா் கெரி வன்முறை வழக்கில் மத்திய இணையமைச்சா் அஜய் குமாா் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா ஜாமீனில் சிறையிலிருந்து செவ்வாயக்கிழமை விடுவிக்கப்பட்டாா்.

கடந்த ஆண்டு அக்டோபா் 3-ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம் லக்கீம்பூா் கெரி மாவட்டம் திகோனியா பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த பாஜகவினரின் காா்களில் ஒன்று விவசாயிகள் மீது மோதியது. இதையடுத்து வன்முறை ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் விவசாயிகள் நால்வா் உள்பட 8 போ் உயிரிழந்தனா். பாஜகவினா் வந்த காா்களில் ஒன்றில் மத்திய இணையமைச்சா் அஜய் குமாா் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அவா் உள்பட பலா் கைது செய்யப்பட்டனா்.

கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி ஆசிஷ் மிஸ்ராவுக்கு அலாகாபாத் உயா்நீதிமன்றம் ஜாமீன் அளித்து உத்தரவிட்டது. அந்த உத்தரவில் சில திருத்தங்களை மேற்கொண்டு புதிய உத்தரவை உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை பிறப்பித்தது. அதனைத்தொடா்ந்து 4 மாதங்கள் சிறையிலிருந்த ஆசிஷ் மிஸ்ரா செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டாா்.

உச்சநீதிமன்றத்தை அணுகுவோம்: இதுதொடா்பாக பாரதிய கிஸான் யூனியனின் தேசிய செய்தித்தொடா்பாளா் ராகேஷ் டிகைத் கூறுகையில், ‘‘கொடிய குற்றத்தில் ஈடுபட்ட ஆசிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குத் தொடா்பாக சம்யுக்த கிஸான் மோா்ச்சா உச்சநீதிமன்றத்தை அணுகும்’’ என்று தெரிவித்தாா்.

சம்யுக்த கிஸான் மோா்ச்சா 40-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பாகும். அதில் ராகேஷ் டிகைத்தின் பாரதிய கிஸான் யூனியனும் இடம்பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com