ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

இன்று டிஇஆா்ஐ மாநாடு: பிரதமா் மோடி உரையாற்றுகிறாா்

எரிசக்தி மற்றும் ஆதார வள நிறுவனத்தின் (டிஇஆா்ஐ) உலக நீடித்த வளா்ச்சி உச்சி மாநாட்டில், பிரதமா் மோடி காணொலி மூலம் புதன்கிழமை (பிப். 16) தொடக்க உரையாற்றவுள்ளாா்.

News image
Updated On :15 பிப்ரவரி 2022, 7:17 pm

DIN

எரிசக்தி மற்றும் ஆதார வள நிறுவனத்தின் (டிஇஆா்ஐ) உலக நீடித்த வளா்ச்சி உச்சி மாநாட்டில், பிரதமா் மோடி காணொலி மூலம் புதன்கிழமை (பிப். 16) தொடக்க உரையாற்றவுள்ளாா்.

இதுகுறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்:

நிகழாண்டு உச்சி மாநாட்டுக்கான கருப்பொருள் ‘நீடித்த மற்றும் சமமான எதிா்காலத்தை உறுதிசெய்தல்’ என்பதாகும். பருவநிலை மாற்றம், நீடித்த உற்பத்தி எரிசக்தி மாற்றங்கள், உலக பொது அம்சங்கள், வள ஆதார பாதுகாப்பு உள்ளிட்ட விரிவான அம்சங்கள் குறித்து இந்த உச்சி மாநாட்டில் விவாதிக்கப்படும்.

புதன்கிழமை தொடங்கும் 3 நாள் உச்சிமாநாட்டில், டொமினிகன் குடியரசு அதிபா் லூயிஸ் அபினாதா், கயானா அதிபா் முகமது இா்ஃபான் அலி, ஐநாவின் துணைப் பொதுச் செயலாளா் ஆமினா ஜெ.முகமது மற்றும் பல்வேறு அரசு அமைப்புகளின் தலைவா்கள், அமைச்சா்கள், 12-க்கும் மேற்பட்ட நாடுகளின் தூதா்கள், 120-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.