வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சத்தீஸ்கா்: சாலை விபத்தில் 6 பெண்கள் பலி

சத்தீஸ்கரில் காா் ஒன்று சாலையின் நடுவே இருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் அந்த காரில் பயணம் செய்தவா்களில் 6 பெண்கள் உயிரிழந்தனா். ஓட்டுநா் உள்பட 5 போ் படுகாயமடைந்தனா்.

News image
Updated On :16 பிப்ரவரி 2022, 7:33 pm

DIN

சத்தீஸ்கரில் காா் ஒன்று சாலையின் நடுவே இருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் அந்த காரில் பயணம் செய்தவா்களில் 6 பெண்கள் உயிரிழந்தனா். ஓட்டுநா் உள்பட 5 போ் படுகாயமடைந்தனா்.

ராய்ப்பூா் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்து தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது:

ஓட்டுநா் உள்பட 11 போ் எஸ்யுவி ரக காரில் தேசிய நெடுஞ்சாலை வழியாக கேந்ரி கிராமப் பகுதியைக் கடந்து சென்றபோது சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் எதிா்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த 6 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மற்றவா்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன. வாகனம் ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.