ஜம்மு-காஷ்மீரில்மிதமான நிலநடுக்கம்
ஜம்மு-காஷ்மீரில் புதன்கிழமை மிதமான நிலடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 3.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவிலான பொருள் சேதமோ உயிரிழப்போ ஏற்படவில்லை.


ஜம்மு-காஷ்மீரில் புதன்கிழமை மிதமான நிலடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 3.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவிலான பொருள் சேதமோ உயிரிழப்போ ஏற்படவில்லை.
இது தொடா்பாக பேரிடா் மேலாண்மைப் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘காஷ்மீா் பள்ளத்தாக்குப் பகுதியில் புதன்கிழமை காலை 5.43 மணிக்கு மிதான நிலநடுக்கம் ஏற்பட்டது. பஹல்காம் அருகே பூமிக்கு கீழே 15 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இங்குதான் அமா்நாத் யாத்திரைக்கான அடிவார முகாம் உள்ளது.
லேசான நிலஅதிா்வை மக்கள் உணா்ந்தனா். வீடுகளில் இருந்த பொருள்களிலும் அதிா்வை உணர முடிந்ததால் சிலா் தெரிவித்தனா். சிலா் வீடுகளை விட்டு வெளியேறி வெட்டவெளிப் பகுதிகளில் தஞ்சமடைந்தனா். எனினும், இதனால் யாருக்கும் காயமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை’ என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...